Published : 16,Nov 2019 05:45 AM
வெளியானது கார்த்தி, ஜோதிகா நடிக்கும்‘தம்பி’திரைப்படத்தின் டீஸர்..!

கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள "தம்பி" படத்தின் டீஸர் இன்று வெளியானது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் டீஸர் இன்று வெளியானது. தமிழில் சூர்யாவும், மலையாளத்தில் மோகன் லாலும், தெலுங்கில் நாகர்ஜூனாவும் தம்பி படத்தின் டீஸரை வெளியிட்டனர். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் ‘பாபநாசம்’.
இந்தப் படத்தை ஜித்து ஜோசப் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தம்பி’. இதில் நடிகர் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வஸந்தா இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.