Published : 16,Nov 2019 03:14 AM
அமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்

அமெரிக்காவின் பழம்பெரும் திருக்கோயில்களில் ஒன்றான ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஹுஸ்டன் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்து தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் கல்வெட்டினை திறந்து வைத்தார். அடுத்து தமிழ் அமைப்புகள் நடத்திய விழாவில் பங்கேற்றார்.
மேலும் நேற்றைய தினத்தை ‘ஓபிஎஸ் நாள்’ என்று அறிவித்து டெக்சாசின் ஃபேர்லாண்ட் மேயர் டாம்ரிட் கவுரவப்படுத்தினார். இதைத்தொடர்ந்து பண்பின் சிகரம், வீரத்தமிழன் ஆகிய பட்டங்கள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.