முற்றிலும் மாறுபட்ட இலங்கை தேர்தல் வாக்களிப்பு முறை.. வாக்களிப்பது எப்படி..?

முற்றிலும் மாறுபட்ட இலங்கை தேர்தல் வாக்களிப்பு முறை.. வாக்களிப்பது எப்படி..?
முற்றிலும் மாறுபட்ட இலங்கை தேர்தல் வாக்களிப்பு முறை.. வாக்களிப்பது எப்படி..?

இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் நடைமு‌றை, பிறநாடுகளைப் போல் அல்லாமல் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. வாக்களிப்பு முறை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவு 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு வாக்குச்சீட்டு‌ முறையே பின்பற்றப்படுகிறது. வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 26 அங்குல நீளத்திற்கு வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சடிக்கப்பட்டிருக்கும். சிங்கள மொழி அகரவரிசைப்படி வேட்பாளர்களின் பெயர் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். 

வேட்பாளரின் பெயருக்கு அருகில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் இருக்கும். இலங்கையில் பொதுமக்கள், முதல் விருப்பம், இரண்டாவது விருப்பம் என்ற வரிசையில் வாக்களிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு ‌அருகில் வாக்களிப்பதற்கான இடம் இருக்கும். ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்க விரும்புவோர் அந்த வேட்பாளரின் பெயருக்கு நேராக உள்ள கட்டத்தில் x எனக் குறியிடலாம். அல்லது முதல் விருப்பமாக கொண்ட வேட்பாளரின் பெயருக்கு அருகேயுள்ள கட்டத்தில் 1 என்றும் இரண்டாவது விருப்பமாக தேர்வு செய்ய விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு அருகேயுள்ள கட்டத்தில் 2 என்றும் வரிசைப்படுத்தலாம். 

வாக்கு எண்ணிக்கையின்போது முதல் விருப்பமாக வாக்காளர்கள் யாரை தேர்வு செய்துள்ளனர் என்பது கணக்கிடப்படும். குறிப்பிட்ட வேட்பாளரை 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் முதல் விருப்பமாக தேர்வு செய்திருந்தால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஒருவேளை 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை எந்த வேட்பாளரும் பெறவில்லை எனில், instant run off என்கிற நடைமுறை‌ பின்பற்றப்படும். அதாவது, முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவர். இவ்விருவரையும் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பமாக எத்தனை பேர் தேர்வு செய்துள்ளனர் என்பது கணக்கிடப்பட்டு அந்த எண்ணிக்கையானது அவர்கள் பெற்ற வாக்குகளுடன் சேர்க்கப்படும், இந்த முறையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்கு பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com