2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியை முன்னிட்டு தற்போது அணியில் 5 வீரர்களை சென்னை அணி விடுவித்திருக்கிறது.
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. ஏலத்துக்கு முன் 8 அணிகளும் தங்கள் வீரர்களை மற்ற அணிகளுக்கு விற்றுக் கொள்ளலாம். வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். வீரர்களை விடுவித்துக் கொள்ளலாம். இதைத்தொடர்ந்து அணியிலிருந்து விடுவிக்கப்படும் 5 வீரர்களின் பட்டியல் இன்று வெளியிடப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விடுவிக்கப்பட்ட 5 வீரர்களின் பெயர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில் சைதன்யா பிஷ்நோய், சாம் பில்லிங்ஸ், துருவ் சோரே, டேவிட் வில்லே, மோகித் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனுடன் தங்கள் கைவசம் இருக்கும் அணிக்கான தொகை எவ்வளவு என்பதையும் சென்னை அணி அறிவித்திருக்கிறது.
அதன்படி, கடந்த ஆண்டு வீரர்களை விலைக்கு வாங்கியது போக மீதம் ரூ.3.2 கோடி கையிருப்பு இருக்கிறது. தற்போது அணியில் இருக்கும் சில வீரர்களை விடுவித்ததன் மூலம் ரூ.8.4 கோடி வந்திருக்கிறது. அத்துடன் அடுத்த ஆண்டு ஏலத்திற்காக ரூ.3 கோடி அணியின் தொகையில் சேர்ந்துள்ளது. இதையெல்லாம் சேர்த்து மொத்தம் ரூ.14.6 கோடி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கையிருப்பில் உள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்