[X] Close

நடைப்பயிற்சி சென்ற இரு மாணவர்கள் மாயம் - வருத்தத்தில் பெற்றோர்

Two-10th-std-students-missing-in-Vellore

வேலூரில் நடைப்பயிற்சி மேற்கொள்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் காணாமல் போயினர்.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு பகுதியை சேர்ந்த பீடி சுற்றும் கூலித் தொழிலாளி சென்றாயன். இவரது மகன் பிரேம்குமார் (15). அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சிவக்குமாரின் மகன் பார்த்தசாரதி (15). இந்தச் சிறுவர்கள் இருவரும் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேட்டப்பட்டு அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு  படித்து வந்தனர்.  நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று காலை 5 மணி அளவில் நடைப்பயிற்சி மேற்கொள்வதாக கூறி வீட்டிலிருந்து ஒன்றாக சென்றுள்ளனர்.


Advertisement

ஆனால் நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் உறவினர்களின் வீடுகள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடி பார்த்தனர். மேலும் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நாட்றம்பள்ளி போலீசார். காணாமல் போன இரு மாணவர்களையும் தேடி வருகின்றனர். 


Advertisement

Advertisement
[X] Close