Published : 27,May 2017 04:37 PM

இந்தியாவில் ஜிகா வைரஸ்: உறுதி செய்த உலக சுகாதார அமைப்பு

WHO-confirms-first-three-cases-of-Zika-Virus-in-India

கொசுக்கள் மூலமாக பரவும் ஜிகா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை அடுத்த பாபுநகரில் கர்ப்பிணி பெண் உள்பட மூவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவல் எதிர்காலத்தில் இருக்ககூடும் என்று எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தை அறிவுறுத்தியுள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதாக அறியப்படும் இடங்களுக்கு பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்