[X] Close

எஸ்.ஐ. கையெழுத்து போட்டு போலி சான்று தயாரித்த 2 வழக்கறிஞர்கள் கைது

2-lawyers-arrested-for-fake-signature-in-sivagangai

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் காவல்துறை துணை ஆய்வாளர் கையெழுத்தை போட்டு, போலி சான்று தயாரித்ததாக இரு வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

கல்லூரணியை சேர்ந்த கலையரசன் என்பவரது நிலப்பத்திரம் தொலைந்துவிட்டது. பத்திர நகல் கேட்டு கலையரசன் விண்ணப்பித்தபோது தொலைந்ததற்கான ஆதாரமாக காவல்துறையின் சான்று சமர்ப்பிக்கும்படி சார் பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. 


Advertisement

இதையடுத்து வழக்கறிஞர்கள் பாலையா, பாண்டியன் ஆகியோரை கலையரசன் அணுகியுள்ளார். இருவரும் காவல்துறை துணை ஆய்வாளர் கையெழுத்தை போட்டு, போலி சான்று தயாரித்து கலையரசனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த சான்றை சரிபார்த்தபோது சார் பதிவாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதில், வழக்கறிஞர்கள் இருவரும் காவல்துறை துணை ஆய்வாளர் சிவம் என்பவரின் கையெழுத்தை போலியாக போட்டு சான்று தயாரித்தது தெரியவந்தது. இதனால் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


Advertisement

Advertisement
[X] Close