இந்தியாவிலிருந்து வெளியேறுகிறதா வோடஃபோன் ?

இந்தியாவிலிருந்து வெளியேறுகிறதா வோடஃபோன் ?
இந்தியாவிலிருந்து வெளியேறுகிறதா வோடஃபோன் ?

மத்திய அரசு உதவ முன்வராவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில் இருப்பதாக வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொழில் செய்வது சவாலான விஷயமாக உள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த வோடஃபோன் நிறுவனத் தலைவர் நிக் ரீட் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 30 சதவிகித சந்தை பங்களிப்புடன் 3-ஆவது பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக வோடஃபோன் நிறுவனம் உள்ளது. இருப்பினும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் அந்நிறுவனத்திற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கு அதிக வரி விதிப்பு, உரிமம் பெறுவதற்கு அதிக கட்டணம், அரசின் விதிமுறைகள் தொழில் செய்வதற்கு சாதகமாக இல்லாதது போன்றவைகளே காரணம் என நிக் ரீட் தெரிவித்துள்ளார். தொலைதொடர்பு துறையில் ஏகபோகத்துக்கு இடமில்லை என அரசு அறிவித்தாலும், மற்ற நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளால் ‌ஏற்படும் தொழில் போட்டியை சமாளிப்பது கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, மத்திய அரசு ஊக்கத் திட்டங்களை அறிவிக்காவிட்டால் இந்தியாவில் தொழிலை தொடர்வது கடினமான விஷயமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். 

வோடஃபோன் முதலில் ஹட்ச் தொலைதொடர்பு நிறுவனத்தை வாங்கியபோதே வரி செலுத்தவில்லை என்ற பிரச்னை எழுந்து, உச்ச நீதிமன்றமும் வரி செலுத்த உத்தரவிட்டது. சமீபத்தில் ஐடியா நிறுவனத்தையும் ஃவோடோபோன் நிறுவனம் வாங்கிய நிலையில், வரி தொடர்பாக சிக்கல்கள் பிரச்னைகள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com