Published : 27,May 2017 04:21 PM
அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு புதிய குழு: ஆளுநர் உத்தரவு

அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் நியமனத்திற்கு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்வுக்குழு பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் வித்தியாசாகர் ராவ், புதிய குழுவை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதில் ஆளுநர் தரப்பு பிரதிநிதியாக நீதிபதி ஆர்.எம்.லோதா இடம்பெறுவார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் இன்று நியமிக்கப்பட்டனர். அதேநேரம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்ட மூவரையும் ஆளுநர் நிராகரித்துவிட்டதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருந்தார். இதனால், காலியாகவுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடத்தை நிரப்புவது மேலும் தாமதமாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.