ஆலப்புழா கோயிலில் நடிகர் விக்ரமுடன் செல்பி எடுக்க போட்டி போட்ட ரசிகர்கள் 

ஆலப்புழா கோயிலில் நடிகர் விக்ரமுடன் செல்பி எடுக்க போட்டி போட்ட ரசிகர்கள் 
ஆலப்புழா கோயிலில் நடிகர் விக்ரமுடன் செல்பி எடுக்க போட்டி போட்ட ரசிகர்கள் 

ஆலப்புழாவில் உள்ள கோயிலில் நடிகர் விகரம் உடன் செல்பி எடுக்க பலரும் முண்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலப்புழாவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி கோயிலில் ‘காவடி’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டார். அவர் பூஜை செய்வதை போன்ற காட்சிகள் அப்போது படமாக்கப்பட்டன. பலரும் இந்தக் கோயிலில் இருந்தக் கூட்டத்தை பார்த்து ஏதோ திருவிழா என நினைத்தனர். ஆனால் அருகில் சென்று பார்த்த போது கேமிரா மற்றும் லைட்கள் வைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

ஒரு தமிழ் படத்தின் படப்பிடிப்பு நடப்பதை அறிந்த பொதுமக்கள் அங்கே குழும தொடங்கினர். அதுவும் விக்ரம் அங்கே இருப்பதை உணர்ந்தவர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டி அடித்தனர். அவ்வளவு பேரும் குவிந்ததால் அங்கே கொஞ்ச நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் கோயில் என்றும் பார்க்காமல் பல இளைஞர்கள் செல்பிக்கு முக்கியத்துவம் கொடுத்தது அங்கே சாமி தரிசனத்தில் இருந்தவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியதாக மலையாள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com