Published : 27,May 2017 02:44 PM
கனடாவின் ஒரு நாள் பிரதமரான 5 வயது சிறுமி

கனடாவின் ஒருநாள் பிரதமராக 5 வயது சிறுமி பதவி வகித்தார்.
கனடாவின் சிபிசி கிட்ஸ் எனும் தொண்டுநிறுவனம் அந்நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஒரு போட்டியினை நடத்தியது. அந்த போட்டியில் வென்ற பெல்லா தாம்சன் எனும் 5 வயது சிறுமிக்கு கனடாவின் ஒருநாள் பிரதமராகும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் அலுவலகத்துக்கு தனது குடும்பத்துடன் பெல்லா விசிட் அடித்தார். அங்கு பிரதமர் ஜஸ்டினுடன் சேர்ந்து தலையணைகளால் ஆன கோட்டை ஒன்றை கட்டிய பெல்லா, அன்றைய பொழுதினை அவருடன் கழித்தார். பிரதமர் ஜஸ்டினுடன் பெல்லா இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, கடந்த வாரம் எனது அலுவலகத்தை மீண்டும் அலங்காரம் செய்தோம். பெல்லா மற்றும் அவரது குடும்பத்தினை எனது அலுவலகத்துக்கு அழைத்துவந்த சிபிசி கிட்ஸுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.