
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் தன்னை தனிமை சிறையில் மாற்ற வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் 28 ஆண்டுகளாக தண்டனை பெற்று வருபவர் முருகன். இவரது சிறை அறையில் இருந்து கடந்த மாதம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சிறைவிதிகளை மீறியதால் முருகனுக்கு வழங்கப்பட்டு வந்த சிறை சலுகைகள் மறுக்கப்பட்டு தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் வேண்டுமென்றே தன் மீது பழி போடுவதாக கூறி கடந்த மாதம் 17 நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சிறைத்துறை பேச்சுவார்த்தைக்கு பிறகு உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது தனிமை சிறையில் மாற்ற வேண்டும் எனக்கூறி மீண்டும் முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.