[X] Close

மருத்துவமனையில் லதா மங்கேஸ்கர் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

Lata-Mangeshkar-hospitalised--on-ventilator-support

பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Advertisement

இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளவர் லதா மங்கேஸ்கர்(90). இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவருக்கு  மூச்சு திணறல் ஏற்பட்டதால், அவர் மும்பையில் உள்ள பிரீச் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Advertisement

இவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், இவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி தனது 90ஆவது பிறந்த நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நிமோனியா இருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close