Published : 27,May 2017 11:44 AM

காஷ்மீரில் ராணுவம் அதிரடி... பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

J-K--Army-confirms-ten-terrorists-killed-in-24-hours

காஷ்மீர் எல்லையில் ராம்பூர் பகுதியில் ஊடுருவ முயன்ற 6 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. 

பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராம்பூர் பகுதியில் இந்திய ராணுவம் காத்திருந்து பயங்கரவாதிகள் நுழைந்தவுடன் தாக்குதல் நடத்தினர். நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தாக்குதலில் 4 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து நடத்திய சோதனையில் மேலும் இரண்டு பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொன்றனர். அங்கு தொடர்ந்து  ராணுவ வீரர்கள்  தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர். 

இதற்கிடையில் ஜம்மு காஷ்மீரின் சாய்மு டிரால் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றொரு பகுதியில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளையும் சேர்த்து கடந்த 24 மணி நேரத்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்