Published : 10,Nov 2019 12:34 PM
மகாராஷ்டிரா ஆளுநருடன் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை, பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தித்துள்ளார்.
288 தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனா இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் அரசியல் மோதல் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து தனது முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள கட்சி என்பதால், பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தித்துள்ளார்.