
டெல்லியில் பார்ட்டிக்கு அழைத்து அமெரிக்க மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது ’நண்பரை’ போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 25-வயதான இளம்பெண் ஒருவர் படிப்பு விசா மூலம் இந்தியா வந்துள்ளார். இங்கு மூன்று பேர் அவருக்கு அறிமுகமாகியுள்ளனர். அவர்களுடன் நண்பராகி இருக்கிறார். ஹோட்டலில், பார்ட்டி தருகிறோம் என நண்பர்கள் அழைப்பு விடுக்க, அந்தப் பெண்ணும் நம்பி ஓட்டலுக்கு சென்றார்.
இதனையடுத்து ஓட்டலில் உள்ள அறையில் வைத்து அவர்களில் ஒருவரான ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப்பெண் கூறியுள்ளார். அவர் பாலியல் வன்கொடுமை செய்த போது மற்ற இரண்டு பேரும் பொருட்கள் வாங்க வெளியே சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த புகாரை அடுத்து அந்த ’நண்பரை’ போலீசார் கைது செய்துள்ளனர்.