Published : 27,May 2017 10:28 AM

32 ஜிபியில் சாம்சங் கேலக்ஸி J5

samsung-galaxy-j5-and-j7-now-available-in-32gb-storage

சாம்சங் கேலக்ஸி J5 மற்றும் சாம்சங் கேலக்ஸி J7 ஸ்மார்ட்போன்கள் 32 ஜிபியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி J5 மற்றும் சாம்சங் கேலக்ஸி J7, 16 ஜிபி ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த வகை சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் J5 பிரைம் மற்றும் சாம்சங் கேலக்ஸி J7, 16 பிரைம் 32 ஜிபியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கேலக்ஸி J7 பிரைம் ஸ்மார்ட்போனில், 1.6 ஜி.எச்.ஜி.ஆக்டா கோர் பிராசஸர், 3,300 mAh திறன் கொண்ட பேட்டரி, 13 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா, ஹெச்.டி.யுடன் கூடிய 5.5 இன்ச் தொடுதிரை உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.

இதேபோல், கேலக்ஸி J5 பிரைம் ஸ்மார்ட்போனில், 5இன்ச்  ஹெச்.டி.தொடுதிரை, எக்ஸிநாஸ் குவாட் - கோர் பிராஸசர், 2ஜிபி ரேம், 6.0 மார்ஸ்மால்லோ OS, 2,400 mAh பேட்டரி வசதிகளும், 13 மெகா பிக்சல் கொண்ட ரியர் கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் கொண்ட முன்புற கேமரா வசதியும் உள்ளன. 
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை விட இந்த வகை ஸ்மார்ட்போன்களில் அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வசதி உள்ளதால் இதற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்