திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம்: பொதுக்குழுவில் தீர்மானம்..!

திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம்: பொதுக்குழுவில் தீர்மானம்..!
திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம்: பொதுக்குழுவில் தீர்மானம்..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மறைவுக்கும், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கும்  கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதாவது, உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம், திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம், திமுக அமைப்புத்தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம்.

வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம்

வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் என தீர்மானம் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com