பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம் -  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம் -  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம் -  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் கூறினார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோரை கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. அனைத்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கினர். 

இறுதி தீர்ப்பாக சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கிடையே தீர்ப்பு வாசிப்பின் போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம் என தலைமை நீதிபதி குறிப்பிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com