நறுக் சாமியாரால் இனி முடியாது: டாக்டர்கள் தகவல்!

நறுக் சாமியாரால் இனி முடியாது: டாக்டர்கள் தகவல்!
நறுக் சாமியாரால் இனி முடியாது: டாக்டர்கள் தகவல்!

பாலியால் பலாத்கார முயற்சியின்போது இளம் பெண்ணால் ஆணுறுப்பு வெட்டப்பட்ட சாமியாரால் இனி பாலியல் ரீதியான துன்புறுத்தலை செய்ய இயலாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா (54). சாமியாரான இவர், பக்கவாதம் தாக்கிய வயதானவரை குணப்படுத்துவதாகக் கூறி ஒரு வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சட்டக்கல்லூரி படிக்கும் மாணவியை, கடந்த 5 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதையடுத்து கத்தியால் அவர் ஆணுறுப்பை வெட்டினார் இளம் பெண். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை அளித்தனர். 

டாக்டர் அஜய் குமார் கூறும்போது, ‘அவரது ஆணுறுப்பு முழுவதுமாக சேதமடைந்துவிட்டது. தமனி மற்றும் நரம்புகள் அதிகமாகப் பாதிப்படைந்துவிட்டன. அதனால் இனி ஆபரேஷன் செய்ய இயலாது என்பதால் ரத்தம் வெளியேறுவதை தடுத்திருக்கிறோம்’ என்றார். 

மற்றொரு மருத்துவரான குமார் கூறும்போது, ’நாங்கள் பயந்தது போல அந்த இடத்தில் நீர்க்கட்டு ஏற்பட்டிருக்கிறது. தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அதை முழுவதுமாக நீக்குவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதை செய்தால்தான் தொற்று மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து அவர் உயிரைக் காப்பாற்ற முடியும்’ என்றார். 

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்கள், ‘அவரால் நின்றுகொண்டு சிறுநீர் கழிக்க முடியாது. உட்கார்ந்தபடிதான் முடியும். அதற்காக சிறுநீர் குழாய் ஒன்றை பொருத்தியிருக்கிறோம். அவரால் இனி பாலியல் உறவில் ஈடுபட முடியாது’ என்று  கூறினர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com