[X] Close

இந்தியாவுக்கு எதிரான போட்டி முக்கியம்: பாக்.கேப்டன்

Pakistan-cricket-captain-about-match-against-India

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் நிச்சயம் வெற்றி பெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-ம் தேதி எதிர்த்து விளையாடுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, டி20 உலகக்கோப்பை போல் அல்லாமல், இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் சாதனை படைக்கும் என தெரிவித்துள்ளார். 

‘இந்தியாவுக்கு எதிரான போட்டி எங்களுக்கு முக்கியமானது. ஏனென்றால் மொத்த நாடும் அந்தப் போட்டியில் நாங்கள் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும். அதனால் மைதானத்தில் நாங்கள் நூறு சதவிகிதம் கடுமையாகப் போராடி, உறுதியாக வெற்றி பெறுவோம். இப்போது நாங்கள் 8-வது இடத்தில் இருக்கிறோம். அதனால் இழப்பதற்கு ஒன்றுமில்லை. இது எங்களுக்கான நேரம். இந்திய அணியை எதிர்கொள்ள சிறந்த பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்’ என்றார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close