வள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு - கும்பகோணத்தில் அர்ஜூன் சம்பத் கைது

வள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு - கும்பகோணத்தில் அர்ஜூன் சம்பத் கைது

வள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு - கும்பகோணத்தில் அர்ஜூன் சம்பத் கைது

தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்த விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் மாற்றியிருப்பது சர்ச்சையை எழுந்தது. பல அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே, தஞ்சையில் வள்ளுவர் சிலை மீது சாணி பூசி அவமதிக்கப்பட்டதால் இந்த விவகாரத்தை மேலும் பூதாகரமாகியது. திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் காவி ஆடை, திருநீறு பூச்சுடன் வள்ளுவரின் படத்தை வெளியிட்டது மற்றும் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் தெரிவித்தன.           

இந்தப் பிரச்னைகள் சற்றே ஓய்ந்த நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு இன்று  தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, அர்ஜூன் சம்பத் இன்று காவித் துண்டு அணிவித்து, திருநீறுபூசி, ருத்ராட்ச மாலை அணிவித்தார். சிலைக்கு மாலை அணிவித்ததோடு காற்பூரமும் ஏற்றி தீபாராதனைக் காட்டினார்.

இந்நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம் தொடர்பாக அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணத்தை அடுத்த உடையாளூரில் கைது செய்யப்பட்ட அவரை போலீசார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com