Published : 04,Nov 2019 08:27 AM

டெல்லி காற்று மாசு: தாமதமாகும் தளபதி64 படப்பிடிப்பு 

Vijay-s--Thalapathy-64--shooting-delayed-due-to-pollution-in-Delhi

டெல்லியில் அதிகரித்த காற்று மாசுபாட்டால் தளபதி64 படப்பிடிப்பு தாமதமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

பிகிலுக்கு பிறகு விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் வரும் 2020-ஆம் ஆண்டு கோடை கொண்டாட்டமாக திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்க உள்ளது. தற்போது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. தற்போது படப்பிடிப்புகள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான சில புகைப்படங்களும் இணையத்தில் பரவின.

இந்நிலையில் தற்போது டெல்லியில் காற்று மாசு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவை விட காற்று மாசு அதிகமாக இருப்பதால் டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே காற்று மாசால் தளபதி64 படப்பிடிப்பும் தாமதமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காற்று மாசு குறைந்தால்தான் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்