தமிழகத்தில் ஜூன் 7-ல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் ஜூன் 7-ல் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் ஜூன் 7-ல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 7-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வெயில் காரணமாக ஜூன் 1-ஆம் தேதிக்கு பதில் ஜூன் 7-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றார். மேலும் அன்றைய தினமே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளி தொடங்கிய நாளிலிருந்து ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ்-பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com