[X] Close

யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல்ஹாசன்

kamal-hasan-speaks-about-rajinikanths-politics

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டை ஆளலாம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


Advertisement

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டை ஆளலாம். ஆனால் தற்போதைய அரசியல் சூழலைப் பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்றுதான் தோன்றுகிறது. காந்தி, நேரு, போஸ் என்ற பெயர் கொண்டவர்கள் எவ்வளவோ பேர் எங்கள் ஊரிலேயே இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தமிழர்களா? என்னைப் பொருத்தவரை நான் என்னை இந்தியனாகவே கருதுகிறேன். இந்தியாவின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கிறேன். என்னைக் கூட கேரளாவில் மலையாளியாகத்தான் பார்க்கிறார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை. சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினியின் கருத்தில் தவறு ஒன்றும் இல்லை. வித்தியாசமான கருத்தும் இல்லை. அரசியல் என்பது சம்பாதிக்கும் இடம் அல்ல. அது சேவை செய்யும் இடம் என்பதை உணர்த்த வேண்டும். கடந்த 6 மாதங்களாக கொண்டாடும் வகையில் ஒரு நிகழ்ச்சி கூட இல்லை. கருணாநிதியின் பிறந்தநாள் மகிழ்ச்சியாக கொண்டாடக்கூடிய நாளாக வருகிறது என்று கூறினார்.

போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம், தயாராக இருங்கள் என்று ரஜினி கூறியது குறித்த கேள்விக்கு, “அதுகுறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை” என்று கூறினார் கமல்ஹாசன்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close