Published : 03,Nov 2019 05:25 PM

“சனாதன இந்து தர்மபத்தின்படியே திருக்குறள் வடிவமைப்பு” - ஹெச்.ராஜா

H-Raja-explain-about-Thiruvalluvar-dress-code

சனாதன இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் திருக்குறளை வள்ளுவர் வடிவமைத்தார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து நேற்று வெளியிடப்பட்ட பதிவில், “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” என்ற குறள் கூறப்பட்டிருந்தது. குறளுக்கான விளக்கம் ஒன்றினையும் பதிவிட்டிருந்தது.

அத்துடன், திருவள்ளுவர் காவி நிற உடையில் உள்ள படத்தையும் பதிவிட்டிருந்தனர். அந்த படத்தில் வள்ளுவர் திருநீர் பூசி, ருத்ராட்சம் அணிந்த நிலையில் இருந்தார். வழக்கமாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் புகைப்படங்களில், திருவள்ளுவர் வெண்மை நிற ஆடை அணிந்திருப்பார். ஆனால் இந்தப் பதிவில் காவி நிறத்தில் அவர் உடை அணிந்திருந்ததால் இதற்கு திமுக, கம்யூனிட்ஸ்டு ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, “சனாதன இந்து தர்மத்தில் சதுர்விதபுருஷார்த்தம் அதாவது நான்கு விதமான மானுட குறிக்கோள் தர்மார்த்த காம மோக்‌ஷம் என்கிறது. அதன் அடிப்படையிலேயே அறம், பொருள், இன்பம் என்று வள்ளுவர் திருக்குறளை வடிவமைத்தார். ஆகவே வள்ளுவமானது வடிவமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில்” என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்