[X] Close

கர்நாடகாவில் மீண்டும் ரிலீஸ் ஆன கேஜிஎஃப் திரைப்படம்

Yash---s----KGF-1----gets-re-release-for-Kannada-Rajyotsava

யாஷ் நடித்த கேஜிஎஃப் திரைப்படம் கர்நாடகாவில் மீண்டும் ரிலீஸ் ஆகியுள்ளது.


Advertisement

இயக்குநர் பிரசாந்த் நீல் தயாரிப்பில் கன்னட திரையுலகில் பிரம்மாண்டமாக உருவாகி வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் கேஜிஎஃப். இந்தப் படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்தார். ‌‌‌இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் வெளியானது. சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் கேஜிஎஃப் திரைப்படம் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.

பணக்காரனாக துடிக்கும் ஒரு சிறுவன் கேங்க்ஸ்டராக மாறுவதும், பின்னர் தங்கச்சுரங்கத்தை நிர்வகிக்கும் வில்லனை கொல்வதற்காக அவன் இடத்துக்கே செல்லும் கதாநாயகன், அங்கு அடிமைப்பட்டு கிடக்கும் மக்களுக்காக வருந்துவதும், அதன் பின் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும் என மாஸ் சினிமாவாக உருவாகி இருந்தது கேஜிஎஃப். வெளியான அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட கேஜிஎஃப்-ன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 


Advertisement

        

இந்நிலையில், கேஜிஎஃப் முதல் பாகம் கர்நாடக தினத்தை முன்னிட்டு இன்று மீண்டும் ரிலீஸ் ஆகியுள்ளது. மாநிலம் முழுவதும் 25-30 ஸ்கிரீனில் திரையிடப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்கம் அந்த படம் திரையங்குகளில் திரையிடப்படவுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close