Published : 01,Nov 2019 10:01 AM

ப.சிதம்பரத்துக்கு கொசுவலை கொடுங்கள் - டெல்லி உயர்நீதிமன்றம் 

delhi-high-court-Disclaimer-bail-for-p-chithambaram

ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் திஹார் சிறையில் உள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்தது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் உடல்நிலை குறித்த அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவக்குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ப.சிதம்பரத்தின் அறையை சுத்தமாக வைத்து கொசுவலை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. மேலும் ஸ்டெரைல் அறை என்பது மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே தேவை எனவும் ப.சிதமப்ரம் உடல்நிலை நன்றாக உள்ளது எனவும் தெரிவித்திருந்தது. 

Related image

இதையடுத்து ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. வாரம் ஒருமுறை ப.சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும், கொசுவலை, மாஸ்க் கொடுக்கவும் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் சிதம்பரத்துக்கு புறநோயாளியாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் சிறப்பு சிகிச்சை தேவையில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்