[X] Close

ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களைக் குவித்த பாக். வீரர்

Pakistan-cricketer-slams-triple-century-in-50-over-domestic-tournament

ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களைக் குவித்து பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.


Advertisement

பாகிஸ்தானில் மாவட்ட அளவிலான உள்ளூர் அணிகள் பங்கேற்கும் ஃபசல் முகமது கிளப் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. 50 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்பட்டு வரும் இந்த தொடரில் பாகிஸ்தானில் உள்ள 98 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கிளப் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஷிர்காபூர் என்ற இடத்தில் நடந்த லீக் போட்டி ஒன்றில் ஆலம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் அல்-ரஹ்மான் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. இதில், ஆலம் பக்ஸ் கிளப்பைச் சேர்ந்த பிலால் இர்ஷாத், 175 பந்துகளில் 320 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆலம் பக்ஸ் அணி 556 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட்டில் வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராக இது அறியப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உள்ளூர் லிமிட்டட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் உதகமண்டலம் ஜேஎஸ்எஸ் இண்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீராம் 486 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்து வருகிறது. அதேபோல உள்ளூர் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை மகராஷ்ட்ராவைச் சேர்ந்த பிரணவ் தாண்டேவாடா 1,000 ரன்கள் குவித்ததே சாதனை.


Advertisement

Advertisement
[X] Close