Published : 31,Oct 2019 05:30 AM

“அரசு வேடிக்கை பார்க்காது”- போராடும் மருத்துவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை

CM-Palanisamy-warning-doctors-those-who-involve-in-protest

அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என போராடும் மருத்துவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே அங்கீகரிக்கப்படாத மருத்துவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். அங்கீகரிக்கப்படாத அரசு மருத்துவர்கள் சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாது எனவும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு, இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை, மேல்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் 7 ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கமும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்னரே வேலைநிறுத்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் திரும்பப் பெற்றது.

அதேசமயம் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் தொடர்ந்து 7-வது நாளாக போராடி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்