Published : 31,Oct 2019 05:15 AM

மருத்துவர்களுக்கு பிரேக் இன் சர்வீஸ் நோட்டீஸ் விநியோகம்

Break-in-Service-notice-issued-to-doctors-involved-in-strike

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து 7 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு பிரேக் இன் சர்வீஸ் நோட்டீஸ் வழங்‌‌கும் பணி தொடங்கியுள்ளது.

Image result for tamilnadu doctors strike

ஊதிய உயர்வு, இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை, மேல்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் 7 ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

Image result for tamilnadu doctors strike

இந்நிலையில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் நாளைக்குள் பயிற்சிக்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் நன்நடத்தை சான்றிதழ் வழங்கப்படாது என சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். மேலும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் பிரேக் இன் சர்வீஸ் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதேபோல், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பணிக்குத் திரும்பாத மருத்துவர்களுக்கு பிரேக் இன் சர்வீஸ் கொடுக்கப்பட்டு, காலிப் பணியிடமாக அறிவிக்கப்படும் எனவும், மாற்று மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்திருந்தார். 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பிரேக் இன் நோட்டீஸ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட சுகாதார துணை இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்