Published : 25,May 2017 11:59 AM

பால் தட்டுப்பாடு என்றால் விஷம் குடிக்கலாமா?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம்

Rajendra-Balaji-Accused-That-Private-Milk-Causes-Cancer-For-Babies

பால் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்பதற்காக விஷத்தைக் குடிக்க முடியுமா என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்கள் பாலைக் கெடாமல் அதிக நாட்கள் பாதுகாக்க ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். அவரின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த தனியார் பால் நிறுவனம், அமைச்சரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் கூறியிருந்தது.

இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, கெட்டுப்போனால்தான் பால், கெடாமல் இருந்தால் அது பால் இல்லை என்றார். தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். கமிஷனுக்காக ரசாயனம் கலந்த பாலை விற்று மக்களின் உயிருடன் பால் முகவர்கள் விளையாடுவதாகவும் ராஜேந்திர பாலாஜி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக தனியார் பால் நிறுவனங்களில் ரகசிய ஆய்வு நடந்து வருவதாகவும் அவர் கூறினார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் குறிப்பிட்ட பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். தயிராக்கப்பட்ட பாலைக்கூட ரசாயனம் கலந்து மீண்டும் பால் ஆக்குவதாகவும் தனியார் பால் நிறுவனங்கள் மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்