[X] Close

ஆழ்துளை விபத்துகள்: மீட்புக் கருவி கண்டுபிடிப்பவர்களுக்கு தமிழக அரசு பரிசு அறிவிப்பு

TN-IT-department-Announces-prize-for-Borewell-rescue-equipment-Finding

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை மீட்க தகுந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அறிவித்துள்ளது. 


Advertisement

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.  சிறுவனை மீட்கும் பணி 80 மணிநேரமாக நடைபெற்றது. எனினும் அந்தச் சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்பது தொடர்பான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க, தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு ஹேக்கத்தான் நடத்தப்பட உள்ளது. 


Advertisement

இதில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க ஒரு தொழில்நுட்பத்தையோ அல்லது இதுதொடர்பாக செயல்விளக்கம் அளிக்கும் ஒரு கருவியையோ கண்டிபிடிக்கலாம். இந்தத் தொழில்நுட்பங்களில் சிறந்த கண்டுபிடிப்பிற்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் செயலாளர் சந்தோஷ் பாபு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close