குழந்தை சுஜித் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிப்பதாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித், 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் தோல்வி அடைந்ததால் உயிரிழந்தான். சுஜித், உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனைக்குப் பின், சுஜித்தின் உடல் நடுக்காட்டுப்பட்டி, பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் மறைவுக்கு பொதுமக்கள், அரசியல், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுஜித் இழப்பு குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தையின் இழப்பு இந்த உலகிற்கு பல பாடங்களைக் கற்றுத் தந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளர். குழந்தையை மீட்க கடுமையான போராட்டங்கள் நடத்தி இருந்தாலும், உயிரோடு மீட்காதது மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாகவும், மீண்டு வரவேண்டும் என்ற பிரார்த்தனை பலிக்காமல் போய்விட்டது எனவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். இந்த மரணம் சாதாரணமல்ல எனக் குறிப்பிட்டுள்ள தமிழிசை, இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!