Published : 25,May 2017 11:52 AM

100 சவரன் தங்க நகை கொள்ளை

100-sovereigns-gold-diamond-stolen-from-house-ambattur

மத்திய கனரக வாகனங்கள் தொழிற்சாலை மேலாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகை 7 லட்சம் மதிப்பிலான வைரம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூர் பள்ளி குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவர் ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான கனரக தொழிற்சாலையில் கூடுதல் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமதி சந்திரன் தாம்பரம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இருவரும் கடந்த திங்கள் அன்று மதுரைக்குச் சென்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத சிலர் வீட்டின் முன் பக்க பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 100 சவரன் தங்க நகை,7 லட்சம் மதிப்பிலான வைர நகை மற்றும் வெள்ளி குடம், வெள்ளி சாமி சிலையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அம்பத்தூர் காவல் நிலையத்தினர் இது குறித்த புகாரை விசாரித்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்