[X] Close

ப.சிதம்பரத்திற்கு திடீர் உடல்நலக் குறைவு - டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை

P-Chidambaram--In-Custody--Taken-To-AIIMS-After-Stomach-Ache-Complaint

உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.  

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த 22 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், வெளிநாடு செல்லக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து தற்போது வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.


Advertisement

இந்நிலையில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திற்கு நேற்று மாலை உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. வயிற்று வலி உள்ளிட்ட சில பிரச்னைகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் இது குறித்து சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆகவே அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர், சிகிச்சைக்கு பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close