Published : 28,Oct 2019 10:10 AM
குமரி கடல் பகுதியில் புதிய புயல் உருவாகிறது - மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரி கடல் பகுதியில் புதிய புயல் ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலின் கன்னியாக்குமரி பகுதி அருகே வரும் புதன்கிழமை ஒரு புதிய புயல் ஒன்று உருவாக உள்ளது. இந்தப் புயல் க்யார் புயல் பயணிக்கும் அதே பாதையில் பயணிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே க்யார் புயலால் கடலுக்கு செல்லாமல் இருக்கும் மீனவர்கள் மீண்டும் ஒரு புதிய புயல் உருவாக உள்ளதால் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மறு அறிவுப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கப்படுகின்றனர். இந்தப் புயல் மஞ்சப்பாறை பகுதி வழியே சென்று ஆழ்கடல் மீன் பிடிக்கும் இடத்தில் வர இருப்பதால், குமரி மீனவர்கள் இந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Cyclone warning alert message from fisheries dept control room. Spread the msg as much. Safety takes precedence over everything else.#Kanyakumaripic.twitter.com/VqPCSWBiGs
— Sharanya Ari (@sharanya_ari) 28 October 2019