Published : 28,Oct 2019 10:06 AM

பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை - சென்னை பாடியில் கொடூரம்

Youngster-Murder-in-Chennai-on-Day-time---Police-inquiry-about-it

சென்னையில் பட்டபகலில் வாலிபர் ஒருவர் ஓடஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, பாடி புதுநகர் 13வது தெருவை சேர்ந்தவர் அழகு (எ) அழகுராஜ் (27). இவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலைபார்த்து வந்தார். கடந்த ஒரு மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அழகுவை சரமாரியாக தலை மற்றும் கழுத்தில் வெட்டியுள்ளனர். இதில்  இரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலே உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெ.ஜெ நகர் போலீசார் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட அழகுராஜ் 2014ஆம் ஆண்டு சிவலிங்கம் என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாடி புதுநகர் பகுதி வாலிபர்களுக்குள் யார் பெரியவர் ? என்ற போட்டி நிலவி வந்ததாகவும், அதன் காரணமாக கொலை நடந்ததா ? என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். அத்துடன் கொலைக்கு பழி தீர்க்க கொலை நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்