Published : 25,May 2017 08:10 AM
நானும் ரஜினி ரசிகன்தான்: செல்லூர் ராஜூ கூல்!

தனிப்பட்ட முறையில் ரஜினி மீது எனக்கு மரியாதை உண்டு. நானும் ரஜினி ரசிகன் தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தனது ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ‘நாட்டில் சிஸ்டம் கெட்டுபோய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என கூறியிருந்தார். மேலும் மு.க.ஸ்டாலின் என் நெருங்கிய நண்பர். திறமையான நிர்வாகி என்றும் பாராட்டியிருந்தார். இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என பலதரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தனிப்பட்ட முறையில் ரஜினி மீது எனக்கு மரியாதை உண்டு. நானும் ரஜினி ரசிகன்தான் என கூறியுள்ளார். இருப்பினும் ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, சிஸ்டம் சரியில்லை என ரஜினிகாந்த் கூறியதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.