சுர்ஜித் குறித்து முதல்வர் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார் - அமைச்சர் விஜயபாஸ்கர்

சுர்ஜித் குறித்து முதல்வர் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார் - அமைச்சர் விஜயபாஸ்கர்
சுர்ஜித் குறித்து முதல்வர் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார் - அமைச்சர் விஜயபாஸ்கர்

சுர்ஜித் மீட்புப்பணி குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 42 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.  

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. குழந்தையை மீட்கும் பணியை ஆரம்பம் முதலே அமைச்சர் விஜயபாஸ்கர் அருகில் இருந்து பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் சுர்ஜித் மீட்புப்பணி குறித்து பேசிய விஜயபாஸ்கர், சுர்ஜித் மீட்புப்பணி குறித்து முதல்வர் பழனிசாமி தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com