Published : 26,Oct 2019 02:25 PM
சுர்ஜித் ஆரோக்கியமாக மீட்கப்பட இறைவனை வேண்டுவோம்- தெலங்கானா ஆளுநர் தமிழிசை

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சுர்ஜித் ஆரோக்கியமாக மீட்கப்பட இறைவனை வேண்டுவதாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
குழந்தை சுர்ஜித் மீட்புப் பணிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைப்பேசியில் தமிழிசை செளந்தரராஜன் கேட்டறிந்தார். ஹைதராபாத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை குழுவிடம் ஆலோசனை செய்து குழந்தையை மீட்க உதவி செய்வதற்கான வாய்ப்புகள் என்ன இருக்கின்றன என்பது குறித்தும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதேநேரத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து எட்டுக் கோடி மதிப்புள்ள அதிநவீன இயந்திரம் வர இருப்பதாகவும் அந்த இயந்திரத்தின் மூலம் ஒன்றரை மணி நேரத்தில் தற்போது குழந்தையை மீட்க போடப்பட்டுள்ள துளைக்கு இணையாக பக்கத்திலேயே மீண்டும் ஒரு துளையிட்டு குழந்தையை மீட்க முடியும் என்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து குழந்தை ஆரோக்கியமாக மீட்கப்பட இறைவனை வேண்டுவோம் என தெரிவித்துள்ளார் தமிழிசை.