பழங்குடியின மாணவர்களுக்கான உதவித் தொகையை பெற்று, படிப்பை தொடராதவர்களிடம் இருந்து தொகையை திருப்பி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு கல்வி உதவித் தொகையில் ரூ.17 கோடியே 36 லட்சம் கையாடல் நடந்துள்ளதாக, தணிக்கை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி கார்த்திகேயன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, இதுகுறித்து பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஆதிதிராவிடர் நலத்துறை முதன்மை செயலாளர் டி.செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கல்வி உதவித்தொகை வாங்கிய பிறகு பல மாணவர்கள் படிப்பை தொடராமல் இடையில் நின்று விட்டதால், அரசுக்கு கோடிக் கணக்கில் இழப்பு ஏற்படுவதாகவும், இந்த தொகையை சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து திருப்பி வசூலிக்க மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்காத கல்வி நிறுவனங்கள் இதுவரை 1 கோடியே 19 லட்சத்து 66 ஆயிரத்து 320 ரூபாயை அரசிடம் திரும்பத் தந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Loading More post
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்