ஹரியானாவில், பாஜக ஆட்சி அமைக்க ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) ஆதரவளித்ததை அடுத்து அந்தக் கட்சியில் இருந்து விலகியுள்ளார், தேஜ்பகதூர் யாதவ்.
எல்லைப் பாதுகாப்புப் படையில், வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை என்று வீடியோ மூலம் புகார் கூறிய வீரர் தேஜ்பகதூர் யாதவ். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பரபரப்பானது. இதையடுத்து அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் அரசியலில் இறங்க முடிவு செய்த அவர், நாடாளுமன்றத் தேர்தலின் போது சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். பின்னர் அதில் இருந்து விலகிய அவர், ஜனநாயக ஜனதா கட்சியில், அதன் தலைவர் துஷ்யந்த் சவுதாலா முன்னிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இணைந்தார்.
ஹரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக தலைவர் மனோகர் லால் கட்டாரை எதிர்த்து கர்னல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார் தேஜ்பகதூர். இந்நிலையில் ஹரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 10 இடங்களை கைப்பற்றிய ஜேஜேபி ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது.
ஜேஜேபி பாஜகவுக்கு ஆதரவு அளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தக் கட்சியில் இருந்து தேஜ் பகதூர் விலகியுள்ளார். அவர் கூறும்போது, ‘பாஜகவுக்கு ஆதரவளித்ததன் மூலம் மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் ஜேஜேபி தலைவர் துஷ்யந்த்’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!
இது வயிறா? இல்ல டூல் பாக்ஸா? - நோயாளியின் வயிற்றை பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்!
நள்ளிரவில் சென்னையை குளிர்வித்த மழை... தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!
சோனியா காந்தியின் பி.ஏ பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!
ஒரேயொரு முறை... ஒரேயொரு வாய்ப்புதானா வாழ்க்கைக்கு? #MorningMotivation #Inspiration
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai