Published : 26,Oct 2019 05:31 AM

ஆழ்துளை கிணற்றில் அசைவின்றி குழந்தை..!

Two-year-old-boy-falls-into-abandoned-borewell-in-Tamil-Nadu

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை மண் மூடப்பட்டதால் தற்போது அசைவின்றி காணப்படுகிறது. 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.30 மணி சுர்ஜித் என்ற இரண்டு வயது குழந்தை தவறி விழுந்தது. சுமார் 17 மணி நேரத்திற்கு மேலாக குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்னர் 70 அடிக்கு சென்றதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன், குழாயில் மண் சரிந்து மூடப்பட்டதால் மேலும் சிக்கல் உண்டானது. இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றிவிட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது. 

இதனிடையே, மண் மூடப்பட்டதால் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுர்ஜித் அசைவின்றி காணப்படுவது கவலை அளிக்கின்றது. 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்