Published : 25,May 2017 06:24 AM
நகைகள், பாஸ்போர்ட் கொள்ளை: பிரான்சில் நடிகை தவிப்பு!

கான் திரைப்பட விழா பிரான்ஸில் நடந்துவருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், ஸ்ருதிஹாசன், விசாகா சிங், ஜெயம்ரவி, ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
பட விழாவில் திரையிடப்பட்ட படம் ஒன்றை பார்த்துவிட்டு நேற்று தனது அறைக்குத் திரும்பினார் நடிகை விசாகா சிங். இவர் தமிழில், பிடிச்சிருக்கு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வாலிபராஜா, பயம் ஒரு பயணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அறைக்குத் திரும்பிய விசாகாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவரது சூட்கேஸ் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பாஸ்போர்ட், லேப்டாப், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர், போலீசில் புகார் செய்துள்ளார்.