[X] Close

 தெலுங்கு ரீமேக்கில் ‘அசுரன்’ - ஹீரோ யார் தெரியுமா?

---Asuran----to-be-remade-in-Telugu-with-actor-Venkatesh

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட் ஆன ‘அசுரன்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’.  இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ‘அசுரன்’. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல பாராட்டை பெற்று வருகிறது. 

Image result for அசுரன்


Advertisement

அதேபோல், சினிமாத்துறையினர் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் என பலரும் ‘அசுரன்’ படத்திற்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். நல்ல வரவேற்பை பெற்ற ‘அசுரன்’ படம், விமர்சனம் ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. அசுரன் ரூ.100 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தது.

Image result for அசுரன்

இந்நிலையில், ‘அசுரன்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை சுரேஷ் பாபு மற்றும் கலைப்புலி எஸ் தாணு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை யார் இயக்குகிறார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. சூரியை ஹீரோவாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் வெற்றி மாறன் உள்ளார். அவருக்கு அடுத்ததாக வடச்சென்னை தொடர்ச்சியும் உள்ளது. தன்னுடைய நடிப்பில் வெளியாகவுள்ள ‘வெங்கி மாமா’ படத்தின் ரிலீஸுக்கு வெங்கடேஷ் காத்திருக்கிறார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close