Published : 25,May 2017 05:14 AM

என்னா டான்ஸு: சந்தானத்தைப் பாராட்டிய சிம்பு

actor-simbu-praise-santhanam

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம், ’சக்க போடு போடு ராஜா’. வைபவி ஷாண்டில்யா ஹீரோயின். சேதுராமன் இயக்குகிறார். விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை விடிவி கணேஷ் தயாரிக்கிறார். சிம்பு இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது.

இதுபற்றி விடிவி கணேஷ் கூறும்போது, ’மனதில் தோன்றியதை அப்படியே வெளிப்படையாகப் பேசுபவர் சிம்பு. அவர் இசை அமைத்த பாடல்கள் அருமையாக வந்துள்ளன. ஜார்ஜியாவில் நாங்கள் படமாக்கிய பாடல் காட்சியை சிம்புவிடம் காண்பித்தோம். பார்த்துவிட்டு சந்தானத்தின் நடனத்தை ஏகத்துக்கும் பாராட்டினார்.

’ரொம்ப அருமையா ஆடியிருக்கார். கண்டிப்பா கிளாப்ஸ் கிடைக்கும்’என்று சிம்பு சொன்னார்’ என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்