Published : 25,Oct 2019 01:33 AM
இறுதிக்கட்டத்தில் அனுமதி வழங்கிய தமிழக அரசு - திரையிடப்பட்ட 'பிகில்' சிறப்புக்காட்சி

நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட சர்ச்சைகளைக் கடந்து, விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன.
கடந்த சில நாட்களாகவே பல்வேறு சர்ச்சைகளிலும் விமர்சனங்களிலும் பிகில் திரைப்படம் சிக்கியது. சில நாட்களுக்கு முன்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் சிறப்புக்காட்சிகள் திரையிட அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தார். அரசின் நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.
நேற்று வரை சிறப்புக்காட்சிகளுக்கு சிக்கல் நிலவிய சூழலில், இரவு சுமார் 10 மணியளவில் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதுகுறித்து புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.