Published : 24,Oct 2019 04:25 PM

தோனிக்கு வாய்ப்பில்லை..?: சூசகமாக பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத்..!

MSK-Prasad-says--we-are-moving-on--from-MS-Dhoni--backing-Rishabh-Pant-to-establish-himself-in-team

இந்திய அணியின் எதிர்காலத்திற்காக இப்போது ரிஷப் பன்ட்க்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாக பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

Image result for msk prasad + dhoni

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் எம்.எஸ்.கே.பிரசாத் பல்வேறு தகவல்களை பகிர்ந்துக்கொண்டார், அதில் "உலகக் கோப்பைக்கு பின்பு தோனி விளையாடவில்லை. எனவே ரிஷப் பன்ட்டை இப்போது ஊக்கப்படுத்தி வருகிறோம். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளை ஓரளவுக்கு பயன்படுத்தியுள்ளார். எனினும், அவர்தான் விக்கெட் கீப்பிங்கில் முதல் சாய்ஸ். அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும், இந்திய அணியின் எதிர்காலத்திற்காக இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது." என்றார்

Image result for rishabh pant

தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாத் "தோனி இப்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். அது அவருடைய விருப்பம். அதேபோல கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப்பெறுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம். எனவே  ரிஷப் பன்ட்டிற்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற முறையில் தொடர் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இந்திய அணிக்கான எதிர்காலம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு, அதன்படியே இப்போது இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்" என்றார் 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்