[X] Close

அடக்குடிகாரா: போதையில் அப்பாவின் கழுத்தை அறுத்த மகன்!

drunken-son-murdered-his-father

மது போதையில் அப்பாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வேங்கவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவர் மகன் வினு. இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர் போதைக்கு அடிமையானதால் சிறிது மன நோயாளியாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இவர் மனைவி மற்றும் குழந்தைகள் இவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். வினு தனது பெற்றோருடன் வசிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை போதையில் வீட்டுக்கு வந்த வினு, தனது தந்தை செல்வராஜை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர், இறந்து போனார். தப்ப முயன்ற வினுவை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மகனே அப்பாவை கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close